பண்ருட்டியில், தையல் கடை உரிமையாளர் வீட்டில் திருடிய ஊழியர் கைது - 25 பவுன் நகைகள் மீட்பு + "||" + Panruti, At the tailor shop owner house Employee arrested for stealing
பண்ருட்டியில், தையல் கடை உரிமையாளர் வீட்டில் திருடிய ஊழியர் கைது - 25 பவுன் நகைகள் மீட்பு
பண்ருட்டியில் தையல் கடை உரிமையாளர் வீட்டில் திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 25 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
பண்ருட்டி,
பண்ருட்டி எல்.என்.புரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடையில் 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைபார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி சுரேஷ் தனது மகள் நிச்சயதார்த்தத்துக்கு ஜவுளி எடுப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் காஞ்சீபுரத்துக்கு சென்றார். இதற்கிடையே அன்று இரவு தனது கடையில் வேலை பார்க்கும் ஊழியர் வினோத்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட சுரேஷ், வீட்டுக்கு சென்று மின்விளக்கை போட்டு வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து வினோத் வீட்டுக்கு சென்றபோது அங்கு வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர் இதுபற்றி கடை உரிமையாளர் சுரேசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அவர் அங்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது வீட்டில் தனது மகள் திருமணத்திற்கு வாங்கி வைத்திருந்த 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்தை காணவில்லை. அவைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
பின்னர் இதுபற்றி பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராசன், இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் மற்றும் போலீசார் சுரேசின் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதில் கடை ஊழியரான விழுப்புரம் விநாயகர் நகரை சேர்ந்த சையத் வகாப்(வயது 43) என்பவர், சுரேஷ் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சையத் வகாப்பை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 25 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.
பெரம்பலூரில் நடந்து வரும் தொடர் திருட்டு சம்பவங்கள் எதிரொலியாக, திருட்டை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடம் போலீசார் துண்டுபிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.