ரவுடி கொலையில் மேலும் ஒருவர் கைது - 2 பேருக்கு வலைவீச்சு


ரவுடி கொலையில் மேலும் ஒருவர் கைது - 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 15 Nov 2019 3:30 AM IST (Updated: 15 Nov 2019 4:40 AM IST)
t-max-icont-min-icon

வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட ரவுடி அன்பு ரஜினி கொலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

முத்தியால்பேட்டை காட்டாமணிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அன்பு ரஜினி (வயது 35). ரவுடியான இவர் கடந்த 11-ந்தேதி இரவு முத்தியால்பேட்டை முத்தையா முதலியார் வீதி சாலைக்கார தெரு சந்திப்பில் மர்ம கும்பலால் வெடிகுண்டுகளை வீசி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சிறையில் உள்ள பிரபல ரவுடியான சோழன் மற்றும் பாண்டியன் ஆகியோரின் தூண்டுதலின்பேரில் நைனார் மண்டபத்தை சேர்ந்த ஸ்ரீராம், சூர்யா, நிவாஸ், சந்துரு, ஜெகன், ஜெரோம் உள்பட 7 பேர் அன்பு ரஜினியை கொலை செய்தது தெரியவந்தது.

இதில் ஸ்ரீராம், ஜெரோம், நிவாஸ், சூர்யா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற குற்றவாளிகளை போலீசார் தேடிவந்தனர்.

இந்த நிலையில் லாஸ்பேட்டை பகுதியில் சந்துரு சுற்றிவருவதாக முத்தியால்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சந்துருவை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை போலீசார் பறி முதல் செய்தனர். மேலும் ரவுடி சோழன் தம்பி பாண்டியன் மற்றும் மணி ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story