செங்கம் அருகே, டாஸ்மாக் கடையை மூடக் கூடாது என்று பொதுமக்கள் தர்ணா போராட்டம்


செங்கம் அருகே, டாஸ்மாக் கடையை மூடக் கூடாது என்று பொதுமக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 16 Nov 2019 4:00 AM IST (Updated: 15 Nov 2019 10:06 PM IST)
t-max-icont-min-icon

செங்கம் அருகே பனைஓலைப்பாடியில் டாஸ்மாக் கடையை மூடக் கூடாது என்று பொதுமக்கள் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

செங்கம் தாலுகா பனை ஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், செங்கம் தாலுகா பனைஓலைப்பாடி கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. சில சமூக விரோதிகள் வேண்டுமென்றே சிலரை தூண்டிவிட்டு டாஸ்மாக் கடைக்கும், அரசுக்கும் அவப்பெயரை உண்டாக்க வேண்டுமென்ற தீய உள்நோக்கத் தோடு பொய்யான தகவலை கூறி டாஸ்மாக் கடையை திறக்க விடாமல் தடுத்து வருகின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். டாஸ்மாக் கடையை மூடாமல் அதே இடத்தில் செயல்பட வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் இந்த டாஸ்மாக் கடையை மூடக் கோரி ஒப்பாரி வைத்து பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்றொரு தரப்பினர் நேற்று கடையை மூடாமல் அதே இடத்தில் செயல்பட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story