நெல்லை புறநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வினர் விருப்ப மனு வழங்கல்


நெல்லை புறநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வினர் விருப்ப மனு வழங்கல்
x
தினத்தந்தி 15 Nov 2019 10:30 PM GMT (Updated: 15 Nov 2019 6:02 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நெல்லை புறநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் போட்டிப்போட்டு விருப்ப மனு அளித்தனர். இதனால் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது.

நெல்லை, 

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கட்சி சின்னத்தில் போட்டியிடக்கூடியவர்கள் அந்ததந்த மாவட்ட கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று கட்சி தலைமை அறிவித்து உள்ளது.

அதன்படி நெல்லை புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனு வாங்க அமைப்பு செயலாளர் மனோஜ்பாண்டியன், மாவட்ட செயலாளர் பிரபாகரன், விஜிலாசத்யானந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முருகையாபாண்டியன், இன்பதுரை ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் பாளையங்கோட்டை சேவியர் காலனியில் உள்ள நெல்லை புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டு வந்து விருப்ப மனுக்களை வாங்கினர். பின்னர் அந்த மனுவை நிரப்பி பணத்துடன் விருப்ப மனுக்களை அமைப்பு செயலாளர் மனோஜ்பாண்டியன், மாவட்ட செயலாளர் பிரபாகரன், விஜிலாசத்யானந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முருகையாபாண்டியன், இன்பதுரை ஆகியோரிடம் வழங்கினர். அ.தி.மு.க.வினர் குவிந்து போட்டி போட்டு விருப்ப மனுக்களை வழங்கியதால் கட்சி அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது.

இதில் சிறுபான்மை பிரிவு செயலாளர் கபிரியேல் ஜெபராஜன், இணைசெயலாளர் டென்சிங்சுவாமிதாஸ், பாளையங்கோட்டை ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் முத்துக்குட்டிபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story