முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு ராணுவ அதிகாரி பணி தேர்வுக்கு பயிற்சி - கலெக்டர் ‌ஷில்பா தகவல்


முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு ராணுவ அதிகாரி பணி தேர்வுக்கு பயிற்சி - கலெக்டர் ‌ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 16 Nov 2019 4:00 AM IST (Updated: 16 Nov 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளுக்கு ராணுவ அதிகாரி பணி தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, நெல்லை மாவட்ட கலெக்டர் ‌ஷில்பா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லை, 

என்ஜினீயரிங் பட்டப்படிப்பு, கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு முடித்த முன்னாள் படை வீரர்களின் சிறார்கள் ராணுவத்தில் அதிகாரியாக பணியில் சேருவதற்கு வருகிற 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி யு.பி.எஸ்.சி. ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணி தேர்வு -1 நடைபெற உள்ளது.

இதற்கு வருகிற 19-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் தங்களது பெயரை முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் முன்னாள் படை வீரர் நல இயக்ககத்தில் பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு தேர்வுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி நடைபெறும் 10 நாட்களில் மாணவர்களுக்கு தங்கும் வசதி, உணவு ஆகியவை முன்னாள் படை வீரர் நலத்துறையால் வழங்கப்படும்.

இந்த பயிற்சிக்கு நெல்லை மாவட்டத்தில் இருந்து செல்லும் மாணவர்கள் நெல்லை மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனரின் அனுமதி கடிதத்தை பெற்றுச் செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story