பயணிகளிடம் பணம் பறித்து மோசடி செய்த டிக்கெட் பரிசோதகருக்கு 4 ஆண்டு கடுங்காவல் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

பயணிகளிடம் பணம் பறித்து மோசடி செய்த டிக்கெட் பரிசோதகருக்கு 4 ஆண்டு கடுங்காவல் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 16 Nov 2019 4:30 AM IST (Updated: 16 Nov 2019 4:03 AM IST)
t-max-icont-min-icon

பயணிகளிடம் பணம் பறித்து மோசடியில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகருக்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

மும்பை, 

பயணிகளிடம் பணம் பறித்து மோசடியில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகருக்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

பயணிகளிடம் பணம் பறிப்பு

மேற்கு ரெயில்வேயில் தலைமை டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வந்தவர் நித்தின் தகாதே (வயது38). இவர் பயணிகளிடம் நிர்ணயம் செய்யப்பட்டதை விட அதிகமாக அபராதம் வசூலிப்பதாகவும், மேலும் வசூலித்த பணத்தை ரெயில்வேயிடம் செலுத்தாமல் மோசடியில் ஈடுபடுவதாகவும் புகார்கள் வந்தன.

இந்தபுகார் குறித்து சி.பி.ஐ.யின் லஞ்ச ஒழிப்பு துறை கடந்த 2016-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. பின்னர் தாதர் ரெயில்நிலையத்தில் ரெயில்வே கண்காணிப்பு அதிகாரிகளுடன் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது பயணிகளிடம் பணம் பறித்து கொண்டு இருந்த நித்தின் தகாதேயை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

4 ஆண்டு கடுங்காவல்

நித்தின் தகாதே மீதான வழக்கு விசாரணை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் அவர் பயணிகளிடம் பணம் பறித்தது, பயணிகளிடம் வசூலித்த பணத்தை ரெயில்வேயிடம் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டது நிரூபணமானது.

இதையடுத்து சிறப்பு கோர்ட்டு, மோசடியில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் நித்தின் தகாதேவுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.

Next Story