மும்பை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் ரூ.735 கோடி மோசடி வருமான வரித்துறை சோதனையில் அம்பலம்


மும்பை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் ரூ.735 கோடி மோசடி வருமான வரித்துறை சோதனையில் அம்பலம்
x
தினத்தந்தி 16 Nov 2019 4:30 AM IST (Updated: 16 Nov 2019 4:18 AM IST)
t-max-icont-min-icon

மும்பை மாநகராட்சி பணிகளை செய்த ஒப்பந்ததாரர்கள் ரூ.735 கோடி முறைகேட்டில் ஈடுபட்டது வருமான வரித்துறை சோதனை மூலம் அம்பலமாகி உள்ளது.

மும்பை,

மும்பை மாநகராட்சி பணிகளை செய்த ஒப்பந்ததாரர்கள் ரூ.735 கோடி முறைகேட்டில் ஈடுபட்டது வருமான வரித்துறை சோதனை மூலம் அம்பலமாகி உள்ளது.

வரி ஏய்ப்பு

மும்பை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான 44 இடங்களில் கடந்த 6-ந் தேதி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மும்பை தவிர சூரத்திலும் மும்பை மாநகராட்சி பணிகளை செய்து வந்த ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான பகுதிகளில் இந்த சோதனை நடந்தது.

இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம், மிகப்பெரிய அளவில் வரி ஏய்ப்பு மற்றும் பணப்பறிப்பு மோசடி நடந்தது தெரியவந்துள்ளது.

ரூ.735 கோடி மோசடி

சில ஆவணங்கள் மூலம் போலி நிறுவனங்களை ஒப்பந்ததாரர்கள் நடத்தி வந்ததும் அம்பலமாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக மும்பை மாநகராட்சி பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் சுமார் ரூ.735 கோடி அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள தகவலில், ‘‘வருமானத்தை குறைத்து காட்டுவதற்காக ஒப்பந்ததாரர்கள் போலி நிறுவனங்கள் மூலம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். எங்களுக்கு கிடைத்த ஆவணங்கள் மூலம் மிகப்பெரிய அளவில் வரி ஏய்ப்பு நடந்தது தெரியவந்துள்ளது. பொய்யான செலவு கணக்கு, வங்கி பணப்பரிமாற்றம் போன்ற மோசடிகளும் அறங்கேறியுள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.

Next Story