ஸ்ரீவைகுண்டம் அருகே மாட்டு வண்டி போட்டி
ஸ்ரீவைகுண்டம் அருகே மாட்டு வண்டி போட்டி நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீவைகுண்டம் அருகே மாட்டு வண்டி போட்டி நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மாட்டு வண்டி போட்டி
அ.தி.மு.க. 48-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, ஸ்ரீவைகுண்டம் அருகே ஸ்ரீமூலக்கரை பஞ்சாயத்து பேட்மாநகரத்தில் மாட்டு வண்டி போட்டி, குதிரை வண்டி போட்டி நேற்று காலையில் நடந்தது. பேட்மாநகரத்தில் இருந்து மீனாட்சிபட்டி வரையிலும் சென்று, திரும்பி வரும் வகையில் 8 கிலோ மீட்டர் பந்தய தூரம் அமைக்கப்பட்டு இருந்தது.
பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி, பூஞ்சிட்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி என 4 பிரிவுகளாக போட்டிகள் நடந்தது. முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ கொடியசைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார்.
வெற்றி பெற்ற மாட்டு வண்டிகள்
பெரிய மாட்டு வண்டி போட்டியில் நாலந்துலாவைச் சேர்ந்த உதயன் துரை பாண்டியன் மாட்டு வண்டி முதலிடமும், வேலங்குளத்தைச் சேர்ந்த கண்ணன் மாட்டு வண்டி 2-வது இடமும், கடம்பூரைச் சேர்ந்த கருணாகர ராஜா மாட்டு வண்டி 3-வது இடமும் பிடித்தது.
சிறிய மாட்டு வண்டி போட்டியில் சண்முகபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் மாட்டு வண்டி முதலிடமும், கடம்பூரைச் சேர்ந்த கருணாகர ராஜா மாட்டு வண்டி 2-வது இடமும், வேலங்குளத்தைச் சேர்ந்த கண்ணன் மாட்டு வண்டி 3-வது இடமும் பிடித்தது.
பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் கம்பத்துபட்டியைச் சேர்ந்த பால்பாண்டி மாட்டு வண்டி முதலிடமும், தேனியைச் சேர்ந்த அணைப்பட்டி மாட்டு வண்டி 2-வது இடமும், மறுகால்குறிச்சியைச் சேர்ந்த சுப்பம்மாள் மாட்டு வண்டி 3-வது இடமும் பிடித்தது.
குதிரை வண்டி போட்டியில் நெல்லை டவுனைச் சேர்ந்த மடத்தான் குதிரை வண்டி முதலிடமும், வல்லநாட்டைச் சேர்ந்த விநாயகம் குதிரை வண்டி 2-வது இடமும், பேராவூரணியைச் சேர்ந்த அப்துல்காதர் குதிரை வண்டி 3-வது இடமும் பிடித்தது.
பரிசளிப்பு
பின்னர் பரிசளிப்பு விழா நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு சண்முகநாதன் எம்.எல்.ஏ. ரொக்கப்பரிசுகளை வழங்கினார்.
பெரிய மாட்டு வண்டி போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.40 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.30 ஆயிரமும் வழங்கப்பட்டது.
சிறிய மாட்டு வண்டி போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.25 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.20 ஆயிரமும் வழங்கப்பட்டது. பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.10 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.7 ஆயிரமும் வழங்கப்பட்டது.
குதிரை வண்டி போட்டியில் வெற்றி பெற்ற குதிரை வண்டிகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.15 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது.
விழாவில் சின்னப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆறுமுகநயினார், மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலாளர் சி.காசிராஜன், ஸ்ரீவைகுண்டம் நகர செயலாளர் எஸ்.காசிராஜன், பஞ்சாயத்து செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story