மாவட்ட செய்திகள்

திருத்துறைப்பூண்டியில் 994 பேருக்கு ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் காமராஜ் வழங்கினார் + "||" + In Thiruthiraipoondi For 994 people Of Rs.1¾ crore Welfare assistance Presented by Minister Kamaraj

திருத்துறைப்பூண்டியில் 994 பேருக்கு ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் காமராஜ் வழங்கினார்

திருத்துறைப்பூண்டியில் 994 பேருக்கு ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் காமராஜ் வழங்கினார்
திருத்துறைப்பூண்டியில் 994 பேருக்கு ரூ.1¾ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.
திருத்துறைப்பூண்டி,

தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருத்துறைப்பூண்டியில் நடந்தது. விழாவுக்கு கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். செல்வராஜ் எம்.பி. ஆடலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு 994 பேருக்கு ரூ.1 கோடியே 80 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசை தேடி மக்கள் என்ற நிலை மாறி மக்களை தேடி அரசு என்ற நிலை தற்போது உள்ளது. எந்த ஒரு திட்ட மானலும் அது மக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் முழு முனைப்போடு செயல்பட்டு வருகிறார். மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் 342 சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு 25 ஆயிரத்து 861 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 13 ஆயிரத்து 168 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், வருவாய் கோட்டாட்சியர் புண்ணியக்கோட்டி, முன்னாள் பேரூராட்சி தலைவர் அருணாச்சலம், நகர கூட்டுறவு வங்கி தலைவர் சண்முகசுந்்தர், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் திரு.நடராஜன், நிலவள வங்கி தலைவர் சிங்காரவேல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல கூத்தா நல்லூரில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் 433 பயனாளிகளுக்கு ரூ.17லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதில் கூத்தாநல்லூர் தாசில்தார் மலர்க்கொடி, நகராட்சி ஆணையர் குமரன் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோலாகல விழா ஏற்பாடு: 43 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் ராமநாதபுரம், விருதுநகரில் மருத்துவ கல்லூரிகள் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்
ராமநாதபுரம், விருதுநகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் கோலாகல விழாக்களில் 2 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். 43 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்குகிறார்.
2. மக்கள் தொடர்பு முகாமில் 163 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் வழங்கினார்
இளையான்குடி அருகே சாலைகிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 163 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
3. ரூ.2¾ கோடி நலத்திட்ட உதவிகள் ; கலெக்டர் வழங்கினார்
சிறப்பு மனுநீதி நாள் முகாமில் ரூ.2¾ கோடி நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் வழங்கினார்.
4. உடன்குடி அருகே, 662 பயனாளிகளுக்கு ரூ.2.57 கோடி நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
உடன்குடி அருகே 662 பயனாளிகளுக்கு ரூ.2.57 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
5. இன்னும் ஒரு வாரத்தில் மனு கொடுத்த இடங்களிலேயே பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
இன்னும் ஒருவாரத்தில் மனு கொடுத்த இடங்களிலேயே பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என மனுநீதி முகாமில் அமைச்சர் விஜய பாஸ்கர் பேசினார்.