கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் தற்கொலை
கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பூந்தமல்லி,
சென்னை கோயம்பேடு ஆழ்வார்திருநகர், பெரியார் நகரைச் சேர்ந்தவர் சண்முகம்(வயது 36). இவருடைய மனைவி ராஜேஸ்வரி (32). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
வீட்டில் ராஜேஸ்வரி மற்றும் அவரது 2 மகள்கள் மட்டும் இருந்தனர். மகள்கள் இருவரும் இரவில் தூங்கிவிட்டனர். நேற்று காலை இருவரும் எழுந்து பார்த்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த கோயம்பேடு போலீசார், தூக்கில் தொங்கிய ராஜேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில் கணவர் இறந்த துக்கம் தாங்க முடியாமல் ராஜேஸ்வரியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது.
தாய்-தந்தையை இழந்து அவர்களின் இரு மகள்களும் அனாதையான சம்பவம் அவர்களது உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சண்முகம், தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. நேற்று முன்தினம் நடந்த அவரது காரிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறவினர்கள், ராஜேஸ்வரிக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றுவிட்டனர்.
வீட்டில் ராஜேஸ்வரி மற்றும் அவரது 2 மகள்கள் மட்டும் இருந்தனர். மகள்கள் இருவரும் இரவில் தூங்கிவிட்டனர். நேற்று காலை இருவரும் எழுந்து பார்த்தனர்.
அப்போது தங்கள் தாய் ராஜேஸ்வரி, வீட்டில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தாயின் உடலை பார்த்து இருவரும் கதறி அழுதனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த கோயம்பேடு போலீசார், தூக்கில் தொங்கிய ராஜேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில் கணவர் இறந்த துக்கம் தாங்க முடியாமல் ராஜேஸ்வரியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது.
தாய்-தந்தையை இழந்து அவர்களின் இரு மகள்களும் அனாதையான சம்பவம் அவர்களது உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story