பருவம் தவறிய மழையால் பயிர்சேதம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கவர்னர் அறிவித்தார்
பருவம் தவறிய மழையால் பயிர்சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி நிவாரணம் அறிவித்தார்.
மும்பை,
பருவம் தவறிய மழையால் பயிர்சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி நிவாரணம் அறிவித்தார்.
பயிர் சேதம்
மராட்டியத்தில் பல மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த பருவம் தவறிய மழை காரணமாக பயிர்கள் சேதமடைந்தன.
இந்த நிலையில் விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிப்பது குறித்து கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி நேற்று தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிவாரண அறிவிப்பை வெளியிட்டார்.
கவர்னர் உத்தரவு
அதன்படி 2 ஹெக்டேர் வரை நெற்பயிர் சேதமடைந்த விவசாயிகளுக்கு ரூ.8 ஆயிரமும், 2 ஹெக்டேர் வரை காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரமும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவரி, மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story