கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் அய்யப்ப பக்தர்கள் விரதம் தொடங்கினர்
கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
திருச்செந்தூர்,
கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
அய்யப்ப பக்தர்கள்
கேரளா மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் மண்டல பூஜைக்காக கோவிலில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. மண்டல பூஜைக்காக சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் ஆண்டு தோறும் கார்த்திகை முதல் தேதியன்று மாலை அணிந்து விரதம் கடைபிடிப்பது வழக்கம். அய்யப்ப பக்தர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்களில் தங்கள் குருசாமி மூலம் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள்.
மாலை அணிந்தனர்
நேற்று கார்த்திகை மாதம் பிறந்ததை தொடர்ந்து திருச்செந்தூர் பகுதியில் உள்ள அய்யப்ப பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாலை அணிய குவிந்த னர். கடலில் புனித நீராடிய பக்தர்கள் தங்கள் குருசாமியின் கைகளினால் திருக்கோவிலில் உள்ள மூலவர், சண்முகர் சன்னதி, தட்சிணாமூர்த்தி சன்னதி, கொடிமரம் முன்புறம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். மாலை அணிய வந்த பக்தர்களுக்கு குருசாமிகள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் மாலை அணிவித்தனர்.
சிறப்பு பூஜைகள்
கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. அதனைத்தொடர்ந்து மற்ற காலபூஜைகள் நடந்தது. திருக்கோவில் வளாகம் எங்கும் அய்யப்பனின் சரண கோஷம் ஒலித்த வண்ணம் இருந்தது.
Related Tags :
Next Story