கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்


கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
x
தினத்தந்தி 18 Nov 2019 4:30 AM IST (Updated: 18 Nov 2019 3:20 AM IST)
t-max-icont-min-icon

கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு நேற்று அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள்.

மும்பை, 

கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு நேற்று அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள்.

மாலை அணிந்த பக்தர்கள்

கார்த்திகை மாதம் நேற்று பிறந்தது. இதையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜைக்காகவும், மகர ஜோதியை தரிசனம் செய்வதற்காகவும் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர். மும்பையிலும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் நேற்று மாலை அணிந்து கொண்டனர்.

அவர்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு பல்வேறு கோவில்களில் சென்று குருசாமி தலைமையில் மாலை அணிந்தனர். சிறுவர்களும் மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர்.

தாராவியில்...

தாராவி ராஜீவ்காந்தி நகரில் உள்ள ஐந்துமலை அய்யப்பன் கோவில், தேவர் நகரில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள். அப்போது, ‘சுவாமியே சரணம் அய்யப்பா' என்ற பக்தி கோ‌ஷம் எழுப்பி வழிபட்டனர்.

இதேபோல மும்பையின் செம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும், தானே, நவிமும்பையிலும் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர்.

மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய அய்யப்ப பக்தர்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் குளித்து விட்டு கோவில்களில் சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் அய்யப்ப சிறப்பு பூஜைகள் நடத்துவார்கள்.


Next Story