தொடர் மழையால் பாகூர் பகுதியில் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு


தொடர் மழையால் பாகூர் பகுதியில் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 18 Nov 2019 10:15 PM GMT (Updated: 18 Nov 2019 5:26 PM GMT)

பாகூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஏற்கனவே முழு கொள்ள ளவை எட்டும் நிலையில் இருந்த 4 ஏரிகள் முழுவதும் நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்கிறது.

பாகூர்,

பாகூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை பாகூர் பகுதியில் மழை பெய்தது. காலையில் தொடங்கிய மழை மதியம் வரை நீடித்தது. பாகூர் சுற்று வட்டார பகுதிகளான கிருமாம்பாக்கம், கன்னியக்கோயில், கரையாம்புத்தூர், சேலியமேடு, தவளக்குப்பம் அபிஷேகப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. பாசன வாய்க்கால்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த மழை காரணமாக பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் மணப்பட்டு ஏரி, சித்தேரி, சேலியமேடு ஏரி மற்றும் இருளன்சந்தை ஏரி ஆகியவை நிரம்பி உள்ளன. அதேபோல் கிருமாம்பாக்கம் ஏரிக்கும் தண்ணீர்வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருகிறது. அதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story