தேன்கனிக்கோட்டையில், விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தேன்கனிக்கோட்டையில், விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Nov 2019 3:11 AM IST (Updated: 19 Nov 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டையில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் நரசிம்மமூர்த்தி தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீராமரெட்டி கலந்து கொண்டு பேசினார். தளி ஒன்றிய தலைவர் ராமன், அஞ்செட்டி ஒன்றிய தலைவர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது அரசு விவசாயிகளின் விரோத போக்கை கைவிட வேண்டும், கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழக எல்லைக்குள் யானைகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், யானைகளால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர். மற்றும் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story