மாவட்ட செய்திகள்

உல்லாஸ்நகரில் சிலிண்டர் வெடித்து ஓட்டல் ஊழியர் பலிஒருவர் படுகாயம் + "||" + The cylinder explodes Hotel employee kills

உல்லாஸ்நகரில் சிலிண்டர் வெடித்து ஓட்டல் ஊழியர் பலிஒருவர் படுகாயம்

உல்லாஸ்நகரில் சிலிண்டர் வெடித்து ஓட்டல் ஊழியர் பலிஒருவர் படுகாயம்
உல்லாஸ்நகரில் சிலிண்டர் வெடித்து ஓட்டல் ஊழியர் பலியானார். மேலும் ஒருவர் படு காயம் அடைந்தார்.
அம்பா்நாத்,

தானே மாவட்டம் உல்லாஸ்நகர் கேம்ப்-3 பகுதியில் சத்குரு என்ற ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் நேற்று மாலை 3 மணியளவில் மின்கசிவு ஏற்ப்பட்டதாக கூறப் படுகிறது.

இதையடுத்து ஏற்பட்ட தீ விபத்தால் அங்கு இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ஓட்டலில் இருந்த ஊழியர் கோவிந்த், வாடிக்கையாளர் தீரஜ் ஆகியோர் படுகாய மடைந்தனர்.


இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஓட்டலில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். மேலும் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு உல்லாஸ்நகர் சென்டிரல் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் சிகிச்சை பெற்று வந்த ஓட்டல் ஊழியர் கோவிந்த் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் தீரஜூக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து உல்லாஸ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.