மாவட்ட செய்திகள்

பா.ஜனதா- சிவசேனா ஆட்சி அமையும் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை + "||" + The Janata-Shiv Sena will rule Ramdas Atwale Faith

பா.ஜனதா- சிவசேனா ஆட்சி அமையும் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை

பா.ஜனதா- சிவசேனா ஆட்சி அமையும் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை
மராட்டியத்தில் பா.ஜனதா - சிவசேனா ஆட்சி அமையும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
மும்பை,

மராட்டியத்தில் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக பா.ஜனதா-சிவசேனா கூட்டணி உடைந்தது. இதையடுத்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறது.


இந்தநிலையில் மராட்டியத்தில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய மந்திரியும், இந்திய குடியரசு கட்சி தலைவருமான ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

நான் அமித்ஷாவிடம், நீங்கள் தலையிட்டால் புதிய வழி பிறக்கும் என கூறினேன். அப்போது ‘‘அவர் (அமித்ஷா) கவலைப்படாமல் இருங்கள், எல்லாம் சரியாகிவிடும். பா.ஜனதா, சிவசேனா ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்கும்'' என என்னிடம் கூறினார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 44 எம்.எல்.ஏ.க்களின் ஒட்டுமொத்த ஆதரவு இல்லாமல் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆக முடியாது. எனவே அவர்கள் துணை முதல்-மந்திரி பதவியை ஏற்றுக்கொண்டு, முக்கிய இலாகாக்களை பகிர்ந்து கொள்ளலாம். சிவசேனா அவர்களின் நிலைப்பாட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும். பா.ஜனதா, சிவசேனாவும் உட்கார்ந்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். சிவசேனாவுக்கு சில ஆண்டுகளுக்கு முதல்-மந்திரி பதவி வழங்குவது குறித்து பா.ஜனதாவும் யோசிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதா எம்.பி அனில் பலூனியை தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்த பிரியங்கா காந்தி
பா.ஜனதா எம்.பி.யும் ஊடகப்பிரிவு தலைவருமான அனில் பலூனியை தேநீர் விருந்துக்கு பிரியங்கா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
2. துரைசாமி மற்றும் நடிகை நமீதா உள்பட 10 பேருக்கு பா.ஜனதாவில் புதிய பதவிகள்
திமுகவில் இருந்து பா. ஜனதாவுக்கு மாறிய துரைசாமி மற்றும் நமீதா உள்பட 10 பேருக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.
3. பா.ஜனதா சார்பில் ஒரு மாதம் போராட்டம் நடைபெறாது - ஜே.பி.நட்டா அறிவிப்பு
பிரதமர் மோடியின் வேண்டுகோளை தொடர்ந்து, பா.ஜனதா சார்பில் ஒரு மாதம் போராட்டம் நடைபெறாது என்று ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.
4. குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து துண்டு பிரசுரம்; பா.ஜனதாவினர் வீடு, வீடாக வழங்கினர்
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து வருகிற 1-ந் தேதி குமரி மாவட்ட பா.ஜனதா சார்பில் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் முன்பு வரை பேரணி நடைபெற உள்ளது.