மாவட்ட செய்திகள்

கப்பலில் வேலை வாங்கி தருவதாக கொத்தனாரிடம் ரூ.13¼ லட்சம் மோசடி தம்பதி உள்பட 3 பேருக்கு வலைவீச்சு + "||" + Three people, including a married couple, have been arrested for allegedly hiring a ship.

கப்பலில் வேலை வாங்கி தருவதாக கொத்தனாரிடம் ரூ.13¼ லட்சம் மோசடி தம்பதி உள்பட 3 பேருக்கு வலைவீச்சு

கப்பலில் வேலை வாங்கி தருவதாக கொத்தனாரிடம் ரூ.13¼ லட்சம் மோசடி தம்பதி உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
தக்கலை அருகே கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி கொத்தனாரிடம் ரூ.13¼ லட்சம் மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பத்மநாபபுரம்,

தக்கலை அருகே முத்தலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ்(வயது 45), கொத்தனார். இவருடைய மனைவி ஜான்சி ராணி(40). ஜேம்ஸ் கடந்த 2 ஆண்டுக்கு முன் அரபு நாட்டில் கொத்தனாராக வேலை செய்து வந்தார்.

ஜேம்ஸ் வீட்டின் அருகில் கண்ணாட்டுவிளையை சேர்ந்த ராமன்(75), இவருடைய மகன் அய்யப்பன்(35), மனைவி அமுதா (33) ஆகியோர் வசித்து வந்தனர். அமுதாவின் குடும்பத்தினர் ஜான்சி ராணியிடம் நட்புடன் பழகி வந்தனர்.


ரூ.13¼ லட்சம் மோசடி

அப்போது அமுதா, தனது குடும்பத்தினர் பலரை கப்பல் வேலைக்கு வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், ஜேம்சுக்கும் ரூ.2 லட்சத்தில் வெளிநாட்டில் கப்பலில் வேலை வாங்கி தருவதாகவும் கூறினார். இதை உண்மை என நம்பிய ஜான்சி ராணி அதற்கு சம்மதித்தார். அதைத்தொடர்ந்து ஜான்சி ராணி கணவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக ரூ.13 லட்சத்து 34 ஆயிரத்தை பல தவணைகளாக அமுதாவின் குடும்பத்தினரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஜேம்ஸ், விடுமுறையில் ஊர் திரும்பினார். அதன்பிறகு பல மாதங்களாகியும் அமுதாவின் குடும்பத்தினர் ஜேம்சை வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜேம்ஸ், அமுதா குடும்பத்தினரிடம் பணத்தை திருப்பிக்கேட்டார். அவர்களும் பணத்தை திருப்பி தருவதாக கூறினார்கள்.

வலைவீச்சு

இந்தநிலையில் சம்பவத்தன்று ஜேம்ஸ், அமுதாவின் வீட்டுக்கு சென்றார். அங்கு வீடு பூட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதா அவருடைய கணவர் அய்யப்பன் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி 2 மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
நெல்லிக்குப்பம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. காரிமங்கலம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் நகை, பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
காரிமங்கலம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் கள்ளச்சாவி போட்டு மர்ம நபர்கள் 30 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை கொள்ளை அடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. கீரனூர் அருகே தி.மு.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு 4 பேருக்கு வலைவீச்சு
கீரனூர் அருகே தி.மு.க. பிரமுகரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. நிலம் வாங்கி தருவதாக டிராவல்ஸ் உரிமையாளரிடம் ரூ.67½ லட்சம் மோசடி தந்தை-மகன் கைது
நிலம் வாங்கி தருவதாக டிராவல்ஸ் உரிமையாளரிடம் ரூ.67½ லட்சம் மோசடி செய்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
5. வீடுபுகுந்து 1¾ கிலோ நகை- ரூ.7 லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
வீடு புகுந்து 1¾ கிலோ நகைகள் மற்றும் ரூ.7 லட்சத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.