திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையங்களில் குழந்தைகள் விளையாடி மகிழ தனிப்பிரிவு


திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையங்களில் குழந்தைகள் விளையாடி மகிழ தனிப்பிரிவு
x
தினத்தந்தி 19 Nov 2019 10:30 PM GMT (Updated: 19 Nov 2019 6:49 PM GMT)

திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையங்களில் குழந்தைகள் விளையாடி மகிழ தனிப்பிரிவு தொடங்கப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை சார்பில் மகளிர் போலீஸ் நிலையங்களை குழந்தை பாதுகாப்பு போலீஸ் நிலையங்களாக மாற்றும் தொடக்க விழா நடந்தது. விழாவில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை பகுதிகளில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் குழந்தை பாதுகாப்பு போலீஸ் நிலையங்களாக மாற்றுவதற்கு ஏதுவாகவும், புகார் அளிக்க வரக்கூடியவர்களின் குழந்தைகள் விளையாடி மகிழவும் தனிப்பிரிவு அமைத்து அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தை திருமணங்கள்

இதன் மூலம் குழந்தைகள் எந்தவித சிரமமும் இன்றி தங்கள் நேரத்தை செலவழிக்கும் விதமாக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 1098 சேவை வாயிலாக கடந்த ஆண்டு 60 குழந்தை திருமணங்களும், இந்த ஆண்டு 48 திருமணங்களும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூகநலத்துறை சார்பாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஊத்துக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், மதியரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story