முதல்-அமைச்சர் நாளை மறுநாள் வருகை: தென்காசி புதிய மாவட்ட தொடக்க விழா குறித்து கலெக்டர் ஆய்வு


முதல்-அமைச்சர் நாளை மறுநாள் வருகை: தென்காசி புதிய மாவட்ட தொடக்க விழா குறித்து கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 19 Nov 2019 10:45 PM GMT (Updated: 19 Nov 2019 8:28 PM GMT)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வருவதையொட்டி, தென்காசி புதிய மாவட்ட தொடக்க விழா குறித்து கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேற்று ஆய்வு செய்தார்.

தென்காசி,

நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) புதிய மாவட்டம் உருவாகிறது. இதன் தொடக்க விழா தென்காசி வாய்க்கால் பாலம் அருகில் உள்ள இசக்கி மகால் வளாகத்தில் நடைபெறுகிறது.

இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய மாவட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதற்காக இசக்கி மகால் வளாகத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்படுகிறது.

இந்த இடத்தை தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேற்று காலை பார்வையிட்டார். பின்னர் மேடை அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இதற்கான வரைபடத்தை பார்த்து மேடை அமைக்கும் இடம், முதல்-அமைச்சர் வந்து செல்லும் வழி, பொதுமக்கள் வரும் வழி, பத்திரிகையாளர்கள் அமரும் இடம் போன்றவற்றை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ., நெல்லை மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story