தர்மபுரி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் சாவு


தர்மபுரி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் சாவு
x
தினத்தந்தி 20 Nov 2019 4:00 AM IST (Updated: 20 Nov 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் தாளநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகாமி (வயது 52). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில் காய்ச்சல் குணமடையாததால் அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர கிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் வைரஸ் கிருமிகள் தாக்குதலால் ஏற்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விசாரணை

மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தது தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து தாளநத்தம் பகுதியில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு தீவிர சிகிச்சைகள் அளிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

சுகாதாரத்துறையினர் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்தும், பொது இடங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

Next Story