பவானி கட்டளை கதவணை மின்நிலைய இணைப்பு சாலையில் மீண்டும் மண்சரிவு கலெக்டர் பார்வையிட்டார்


பவானி கட்டளை கதவணை மின்நிலைய இணைப்பு சாலையில் மீண்டும் மண்சரிவு கலெக்டர் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 19 Nov 2019 11:00 PM GMT (Updated: 19 Nov 2019 8:48 PM GMT)

பவானி கட்டளை கதவணை மின்நிலைய இணைப்பு சாலையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டார்.

பரமத்திவேலூர்,

நாமக்கல், ஈரோடு ஆகிய 2 மாவட்டங்களை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே சோழசிராமணி-பாசூர் இடையே பவானி கட்டளை கதவணை மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த பாலத்திற்கான இணைப்பு சாலையில் கடந்த வாரம் திடீரென மண்சரிவு ஏற்பட்டது.

இதையடுத்து அந்த வழியாக கனரக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் சாலை சரிசெய்யும் பணிகளை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி கடந்த சில தினங்களுக்கு முன்பு பார்வையிட்டு ஆய்வு செய்து மண்சரிவு சரி செய்யப்பட்டு சாலை அமைக்கப்படும் என்றார்.

தடை

இதையடுத்து நேற்று மீண்டும் இணைப்பு சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் இருசக்கர வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து கலெக்டர் மெகராஜ் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story