போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துன்புறுத்துவதாக கூறி வி‌‌ஷம் குடித்த வீடியோவை வெளியிட்ட வாலிபர்


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துன்புறுத்துவதாக கூறி வி‌‌ஷம் குடித்த வீடியோவை வெளியிட்ட வாலிபர்
x
தினத்தந்தி 21 Nov 2019 4:45 AM IST (Updated: 20 Nov 2019 11:10 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துன்புறுத்துவதாக கூறி வி‌‌ஷம் குடித்த வீடியோவை வாலிபர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

கரூர்,

கரூர் அருகே உள்ள சனப்பிரட்டி பகுதியை சேர்ந்தவர் சதானந்தம் என்கிற முனியன் (வயது 21). பெயிண்டரான இவர், நேற்று முன்தினம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வீடியோ வைரலாக பரவியது. அந்த வீடியோவில் முனியன் கரூர் பசுபதிபாளையம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றின் கரையில் அமர்ந்து உள்ளார்.

அப்போது அவர் கூறுகையில், பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தன் மீது பொய் வழக்கு போட்டு துன்புறுத்துவதாகவும், இதனால் தான் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், தன்னுடைய நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது என கூறுகிறார். பின்னர் குளிர்பானத்தில் பூச்சி மருந்தை (வி‌‌ஷம்) கலந்து குடிக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்ததும் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் முனியனை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் கரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முனியனின் குற்றச்சாட்டு குறித்து போலீஸ் உயரதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story