ரஜினி-கமல் ஒரு முடிவு எடுத்தால், மக்கள் வேறு முடிவு எடுப்பார்கள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அதிரடி பேட்டி
ரஜினி-கமல் ஒரு முடிவு எடுத்தால், மக்கள் வேறு முடிவு எடுப்பார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
விருதுநகர்,
ரஜினி, கமல் ஒன்று சேர்ந்தாலும் அவரது ரசிகர்கள் சேரமாட்டார்கள். ரசிகர்கள் மத்தியில் பல பிரச்சினைகள் உள்ளன. ரஜினி-கமல் ஒரு முடிவு எடுத்தால், மக்கள் வேறு ஒரு முடிவு எடுப்பார்கள். தேர்தலில் அ.தி.மு.க.தான் வெல்லும். இரட்டை இலைதான் ஜெயிக்கும்,
உலகமே அதிசயமாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இவ்வளவு பெரிய நடிகராக வருவார் என்று ரஜினி கனவில்கூட நினைத்திருக்க மாட்டார். அவர் நடிகராக வந்ததும் ஒரு அதிசயம்தான்.
தனித்து நிற்க வேண்டும்
தி.மு.க. கூட்டணியில்தான் பிரச்சினைகள் உள்ளன. அ.தி.மு.க.வில் எந்த பிரச்சினையும் இல்லை. தி.மு.க. கூட்டணி விரைவில் உடையும்,
அனைத்து கட்சியும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து நிற்க வேண்டும். அப்போது யாருக்கு பலம் இருக்கிறது என்று பார்த்துவிட்டு, சட்டமன்றத் தேர்தலில் யார் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்று முடிவெடுக்கலாம். உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து அ.தி.மு.க. அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அனைத்து திட்டங்களையும் பொதுமக்களின் நலன் கருதியே செயல்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.

Related Tags :
Next Story