மாவட்ட செய்திகள்

ஊட்டியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி: குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிலை மாற வேண்டும் கலெக்டர் பேச்சு + "||" + Awareness Program in Ooty: Sending Children to Work

ஊட்டியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி: குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிலை மாற வேண்டும் கலெக்டர் பேச்சு

ஊட்டியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி: குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிலை மாற வேண்டும் கலெக்டர் பேச்சு
குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிலை மாற வேண்டும் என்று ஊட்டியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் பேசினார்.
ஊட்டி,

நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊட்டி சேரிங்கிராசில் உள்ள தோட்டக்கலைத்துறை அரங்கில் நடைபெற்றது. மேலும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், பள்ளி இடைநிற்றலால் ஏற்படும் பிரச்சினைகள், பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பதற்கான சட்டம் போன்றவை குறித்த கண்காட்சி நடந்தது. அதனை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:- 18 வயது பூர்த்தி அடையாமல் திருமணம் செய்வது, பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, மன ரீதியான துன்புறுத்துவது உள்பட பல்வேறு பிரச்சினைகள் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. தேநீர் கடை, உணவு விடுதி, கட்டிட தொழிலில் குழந்தைகளை பணியில் ஈடுபடுத்துவதும் நடந்து வருகிறது. அதனை முற்றிலும் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.


உறுதிமொழி ஏற்பு

குழந்தைகள் பாதுகாப்பிற்காக கடந்த 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. நீலகிரியில் 60 சதவீத குழந்தைகள் மட்டுமே பள்ளிக்கு செல்கிறார்கள். மீதம் உள்ள 40 சதவீதத்தினர் குழந்தை தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிலை மாற வேண்டும். குழந்தை திருமணத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் தைரியமாக முன்வந்து குழந்தை பாதுகாப்பு மையத்தின் 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார். அதனை தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நாட்டின் சுதந்திரம் ஒருமைப்பாடு ஆகியவற்றை காக்கவும், வலுப்படுத்தவும் என்னை அர்ப்பணித்து செயல்படுவேன். நான் ஒரு போதும் வன்முறையில் ஈடுபட மாட்டேன். மதம், மொழி, வட்டாரம் மற்றும் அரசியல் அல்லது பொருளாதார பேதங்களுக்கு அரசியல் சட்டத்திற்கு உட்பட்டும் தீர்வு காண தொடர்ந்து பாடுபடுவேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) இமிலிசா மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மாவட்டத்தில் 3 லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கலெக்டர் தகவல்
சேலம் மாவட்டத்தில் 3 லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
2. கள்ளக்குறிச்சியில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சைக்கிள் பேரணி கலெக்டர் பங்கேற்பு
கள்ளக்குறிச்சியில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் கலெக்டர் கிரண்குராலா கலந்து கொண்டார்.
3. நாட்டின வகைகளுக்கு அச்சுறுத்தலாக திகழும் மீன்கள் வளர்க்க தடை கலெக்டர் ரத்னா எச்சரிக்கை
நாட்டின மீன்களுக்கு அச்சுறுத்தலாக திகழும் மீன்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் ரத்னா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4. கள்ளக்குறிச்சியில் குடியரசு தின விழா நடைபெறும் இடத்தை கலெக்டர் ஆய்வு
கள்ளக்குறிச்சியில் குடியரசு தின விழா நடைபெறும் இடத்தை கலெக்டர் கிரண்குராலா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
5. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக 24,535 விண்ணப்பங்கள்; கலெக்டர் அன்பழகன் தகவல்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக 24 ஆயிரத்து 535 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்று கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.