அரியலூர் மாவட்டத்தில் இளம் சிறார் காவல் பிரிவு தொடங்க வேண்டும் கலெக்டர் ரத்னா பேச்சு


அரியலூர் மாவட்டத்தில் இளம் சிறார் காவல் பிரிவு தொடங்க வேண்டும் கலெக்டர் ரத்னா பேச்சு
x
தினத்தந்தி 21 Nov 2019 11:00 PM GMT (Updated: 21 Nov 2019 3:38 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் இளம் சிறார் காவல் பிரிவு தொடங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ரத்னா கூறினார்.

அரியலூர்,

அரியலூரில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில், குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் கலெக்டர் ரத்னா தலைமையில் நடந்தது. அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சுமதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் ரத்னா பேசுகையில், மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர் நீதிக்குழுமத்திற்கு வரப்பெற்ற குழந்தைகளுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அவர்களுக்கு இளைஞர் நீதி நிதி பெற்று தருதல், பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பதாகைகள் பார்வைக்கு வைத்தல், விழிப்புணர்வின் போது அவர்களுக்கு இண்லேன்ட் கடிதம் வழங்குதல் வேண்டும். குழந்தைகள் இல்லங்களில் ஆய்வுக்குழு, அனைத்து உறுப்பினர் களுடன் சென்று ஆய்வு செய்து குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதி செய்யவேண்டும். மேலும் பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தை களுக்கு அரசு நிவாரண உதவித்தொகை பெற்றுத்தர வேண்டும்.

சிறப்பு காவல் பிரிவு

மாவட்டத்தில் இளம் சிறார் சிறப்பு காவல் பிரிவு தொடங்கப்பட்டு, அனைத்து போலீஸ் நிலையங்களிலும் குழந்தைகள் நல அலுவலர்கள் நியமனம் செய்திட வேண்டும் என்றார்.மேலும் கூட்டத்தில், குழந்தைகள் பாதுகாப்பு அலகின் நடவடிக்கைகள் குறித்தும் 5 மாத பணிகளின் நடவடிக்கைகளையும், இனிமேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவரும், இளைஞர் நீதிக்குழுமத்தின் தலைவருமான சந்திரசேகர், இணை இயக்குனர் (குடும்ப நலம்) இளவரசன், மாவட்ட சமூக நல அலுவலர் அன்புகுளோரியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், குழந்தைகள் நலக்குழு தலைவர் துரைராசன், நன்னடத்தை அலுவலர் அருள்தாஸ், சுகாதாரத்துறை, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் மற்றும் தத்துவள மைய பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story