திருவாரூரில் 491 பேருக்கு ரூ.52½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் காமராஜ் வழங்கினார்


திருவாரூரில் 491 பேருக்கு ரூ.52½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் காமராஜ் வழங்கினார்
x
தினத்தந்தி 21 Nov 2019 10:45 PM GMT (Updated: 21 Nov 2019 5:29 PM GMT)

திருவாரூரில் 491 பேருக்கு ரூ.52½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு 491 பேருக்கு ரூ.52 லட்சத்து 64 ஆயிரத்து 788 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் 2 அரசு பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த 374 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் ஆகியவற்றை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிய சமூக பாதுகாப்பு திட்டங்களை தொடர்ந்து மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

விலையில்லா மடிக்கணினி

ஏழை, எளிய சாதாரண மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின்கீழ் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளை அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விண்ணப்பித்தால் உடனடியாக மாற்றம் செய்து தரப்படும். விலையில்லா மடிக்கணினி முதல் காலணி வரை வழங்குகின்ற அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இதில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், உதவி கலெக்டர் ஜெயபிரீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story