யூரியா உரம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும் தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்


யூரியா உரம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும் தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 22 Nov 2019 4:30 AM IST (Updated: 22 Nov 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

யூரியா உரம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகல் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் திருக்கண்ணபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ். சரவணன் தலைமை தாங்கினார்.

மாவட்ட துணை செயலாளர் பாபு இளஞ்செழியன், முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர் அப்துல் ஜப்பார், தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் காசிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் துரையரசன் வரவேற்றார். நாகை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கவுதமன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வருகிற உள்ளாட்சி தேர்தலில் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட 22 ஊராட்சிகளில் தகுதியான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க ஊராட்சி அளவிலான குழுக்களை அமைத்து வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

யூரியா உரம்

அதேபோல உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும். தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை விளக்கி திண்ணை பிரசாரம் செய்வது. திருமருகல் ஒன்றியத்தில் சேதமடைந்துள்ள அனைத்து கிராம சாலைகளை சீரமைக்க வேண்டும். யூரியா உரம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள் கண்ணையன், சோமு, கார்த்திகேயன் உள்ளிட்ட 22 ஊராட்சிகளின் மாவட்ட ஒன்றிய, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். முடிவில் தெற்கு ஒன்றிய பொருளாளர் பாலையன் நன்றி கூறினார்.

Next Story