ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை


ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை
x
தினத்தந்தி 21 Nov 2019 10:00 PM GMT (Updated: 21 Nov 2019 7:49 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

ஈரோடு, 

ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதைத்தொடர்ந்து மாலையில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்யத்தொடங்கியது.

சுமார் 15 நிமிடங்கள் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் பள்ளமான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. குறிப்பாக ஈரோடு பெருந்துறைரோடு குமலன்குட்டை பகுதியில் மழைநீர் அதிகமாக தேங்கியது. இதனால் அந்த வழியாக நடந்து சென்றவர்கள் சிரமப்பட்டனர்.

இதேபோல் அந்தியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் 10 மணி வரை பலத்த மழை ெபய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது. பல கடைகளை வெள்ளம் சூழ்ந்தது.

மேலும் 11 அடியாக இருந்த அந்தியூர் பெரிய ஏரி 1 அடி உயர்ந்து 12 அடியாக உயர்ந்தது. இந்த மழையால் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து வினாடிக்கு 20 கனஅடி நீர் வெளியேறி கெட்டிசமுத்திரம் ஏரிக்கு செல்கிறது. கோபியில் நேற்று மாலை 4.50 மணி முதல் பலத்த மழையாகவும் லேசான மழையாகவும் பெய்து கொண்டிருந்தது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

கொடிவேரி -44.2, குண்டேரிப்பள்ளம் -26.2, வரட்டுப்பள்ளம் -20.2, அம்மாபேட்டை -14, பெருந்துறை -12, மொடக்குறிச்சி -12, சத்தியமங்கலம் -11, கோபி -8, பவானிசாகர் 4.6, ஈரோடு -5, தாளவாடி -5, கவுந்தப்பாடி -4.2, நம்பியூர் -2, பவானி- 2, சென்னிமலை -1.

Next Story