உலக நன்மை வேண்டி வைரவன்பட்டி வைரவநாதர் கோவிலில் யாகம்


உலக நன்மை வேண்டி வைரவன்பட்டி வைரவநாதர் கோவிலில் யாகம்
x
தினத்தந்தி 21 Nov 2019 10:30 PM GMT (Updated: 21 Nov 2019 9:00 PM GMT)

திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டியில் உள்ள வைரவநாதர் கோவிலில் உலக நன்மை வேண்டி யாகம் நடைபெற்றது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ளது வைரவன்பட்டி. இங்கு நகரத்தார் சமுதாயத்திற்குட்பட்ட வடிவுடைய அம்பாள் உடனுறை வளரொளி நாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உலக நன்மை வேண்டி ராஜ மார்த்தாண்ட பைரவருக்கு மகா யாகம் நடைபெற்றது. இந்த யாகம் ஐதராபாத்தைச் சேர்ந்த ஜீவாலா பிரயோக சென்ட்ரல், ஜீவாலா சென்ட்ரல் மற்றும் சென்னை ஜீவாலா டிரஸ்ட் ஆகியவை சார்பில் நடைபெற்றது. மேலும் இந்த நிறுவனங்கள் சார்பில் ஆண்டிற்கு ஒரு பைரவத்தலத்தில் மகா யாகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு திருப்புவனம் அருகே உள்ள திருப்பாச்சேத்தியில் மகா யாகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

உற்சவர்கள்

இந்த ஆண்டு யாக பூைஜக்காக கோவில் அருகே யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு பூஜைகள் தொடங்கியது. வேதியர்கள் சங்கல்பம் நிகழ்ச்சியும் ஆராதனை, யாகசாலையில் 108 கலசங்களில் புனிதநீர் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று அதன் பின்னர் சுத்தி பூஜை, தந்திர, மந்திர பிரதிஷ்டை நடைபெற்றது. மாலையில் மீண்டும் யாகம் தொடங்கி இரவு வரை யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இந்த யாகசாலையில் அனைத்து சாமிகளும் உற்சவர்களாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து யாகசாலை கலச புனிதநீரால் பைரவருக்கு அபிஷேக ஆராதனைகளுடன் விழா நிறைவுபெற்றது.

Next Story