அ.தி.மு.க.வில் புதிதாக சேர்ந்தவர்களுக்கும் போட்டியிட வாய்ப்பு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு


அ.தி.மு.க.வில் புதிதாக சேர்ந்தவர்களுக்கும் போட்டியிட வாய்ப்பு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு
x
தினத்தந்தி 22 Nov 2019 4:30 AM IST (Updated: 22 Nov 2019 2:35 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலில் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும்,கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.

திருச்சுழி,

திருச்சுழியில் வடக்கு, தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் ரெட்டியபட்டி மற்றும் திருச்சுழியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சுழி தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், வடக்கு ஒன்றிய செயலாளர் முனியாண்டி ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் பூலாங்கல் சித்திக் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சுழி தெற்கு, வடக்கு ஒன்றியங்களில் கவுன்சிலர், ஒன்றிய குழு தலைவர், துணைத்தலைவர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய பொறுப்புகளில் அ.தி.மு.க.வினர் தான் வெற்றி பெற வேண்டும். அதற்கு அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.

வாய்ப்பு

தற்போது கட்சியில் சேர்ந்துள்ளவர்களையும் அரவணைத்து அவர்களுக்கும் பதவிகள் அளித்து ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடக்கூடியவர்கள் அந்த ஊரை சேர்ந்தவராகவும், அந்த ஊரில் நன்மதிப்பை பெற்றவராகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்வார்கள். ஒரு பதவிக்கு நான்கு, ஐந்து பேர் விருப்ப மனு கொடுத்துள்ளீர்கள். யார் நின்றால் வெற்றி பெற முடியுமோ அவர்களை தேர்ந்தெடுத்து தலைமைக்கு பரிந்துரை செய்யுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சாத்தூர் ராஜவர்மன் எம்.எல்.ஏ., வடக்கு, தெற்கு ஒன்றிய அவை தலைவர்கள் சொக்கர், ராதாகிருஷ்ணன், பிற அணி ஒன்றிய செயலாளர்கள் எம்.ஜி.ஆர். மன்றம் குருசாமி, திருக்கண்ணன், பேரவை செயலாளர் ராமலிங்கம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர்கள் கணேசன், ராஜாராம், மாணவர் அணி செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், குமார், மீனவர் பிரிவு செயலாளர்கள் சுப்புராஜ், சகாதேவன், இளைஞர் பாசறை செயலாளர் வேல்முருகன், சிறுபான்மை பிரிவு செயலர்கள் நாகூர்கனி, மணிவேல். இலக்கிய அணி செயலாளர்கள் அங்கையர்கண்ணி, ஒன்றிய பொருளாளர் சிங்கம்புலி, மாவட்ட பிரதிநிதிகள் மாடசாமி, முத்துராஜா, யாசர் அராபத், வனிதா திருமுருகன், மாரியம்மாள் செல்வராஜ், எம்.ஜி.ஆர். மன்ற அவைத் தலைவர் தினகரன், பேரவை துணை செயலாளர் பழனிக்குமார், திருச்சுழி ஊராட்சி செயலர் பாலமுருகன், பச்சேரி சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரணி முத்துவேல் நன்றி கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அருப்புக்கோட்டையில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு 593 பேருக்கு ரூ.1 கோடியே 32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கண்ணன் தலைமை தாங்கினார்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் சந்திரபிரபா, ராஜவர்மன், மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், கோட்டாட்சியர் செல்லப்பா, தாசில்தார் பழனிசாமி அ.தி.மு.க. நகர செயலாளர் சக்திவேல்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் சங்கரலிங்கம், வெங்கடேஷ், பேரவை செயலாளர் சோலை சேதுபதி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் யோகவாசுதேவன். எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் ராமர், சாத்தூர் ஒன்றிய செயலாளர் தேவதுரை, கருப்பசாமி, மோகன்வேல், மோகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story