கர்நாடகத்தில் இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது 15 தொகுதிகளில் 165 பேர் போட்டி - டிசம்பர் 5-ந் தேதி வாக்குப்பதிவு
கர்நாடகத்தில் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற டிசம்பர் 5-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. 15 தொகுதிகளில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 165 பேர் போட்டியிடு கிறார்கள்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு வருகிற 5-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
இடைத்தேர்தலையொட்டி வேட்புமனுக்கள் வாபஸ் நேற்றுடன் முடிவடைந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இடைத்தேர்தல் களத்தில் 165 வேட்பாளர்கள் உள்ளனர். இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
“கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள அதானி, காக்வாட், கோகாக், எல்லாப்பூர், இரேகெரூர், ராணிபென்னூர், விஜயநகர், சிக்பள்ளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்தபுரம், மகாலட்சுமி லே-அவுட், சிவாஜிநகர், ஒசக்கோட்டை, கே.ஆர்.பேட்டை, உன்சூர் ஆகிய 15 தொகுதிகளுக்கு வருகிற டிசம்பர் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 18-ந் தேதி முடிவடைந்தது.
248 வேட்பாளர்கள் 355 மனுக்களை தாக்கல் செய்தனர். சட்டப்படி இல்லாத 54 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மனுக்கள் பரிசீலனையின்போது, 218 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இன்று(அதாவது நேற்று) கடைசிநாள். 53 வேட்பாளர்கள் தங்களின் மனுக்களை வாபஸ் பெற்றனர்.
அதனைத்தொடர்ந்து தற்போது, தேர்தல் போட்டியில் 165 வேட்பாளர்கள் உள்ளனர். இதில் 156 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள் ஆவார்கள். தொகுதி வாரியாக பார்த்தால், அதானி தொகுதியில்-8 வேட்பாளர்கள், காக்வாட்டில் 9 பேர், கோகாக்கில் 11 பேர், எல்லாப்பூரில் 7 பேர், இரேகெரூரில் 9 பேர், ராணிபென்னூரில் 9 பேர், விஜயநகரில் 13 பேர், சிக்பள்ளாப்பூரில் 9 பேர், கே.ஆர்.புரத்தில் 13 பேர், யஷ்வந்தபுரத்தில் 12 பேர், மகாலட்சுமி லே-அவுட்டில் 12 பேர், சிவாஜிநகரில் 19 பேர், ஒசக்கோட்டையில் 17 பேர், கே.ஆர்.பேட்டையில் 7 பேர், உன்சூரில் 10 பேர் இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர்.
இவற்றில் அதிகபட்சமாக சிவாஜிநகரில் 19 பேரும், குறைந்தபட்சமாக எல்லாப்பூர் மற்றும் கே.ஆர்.பேட்டையில் 7 பேரும் போட்டியிடுகின்றனர். கே.ஆர்.பேட்டை, கோகாக், யஷ்வந்தபுரம், சிக்பள்ளாப்பூர் ஆகிய 4 தொகுதிகளில் ஒருவர் கூட மனுவை வாபஸ் பெறவில்லை.
தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்த 319 பறக்கும் படைகள், 578 நுண்ணிய கண்காணிப்பு குழுக்கள் பணியாற்றி வருகின்றன. தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் இதுவரை ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.28 கோடி ரொக்கம் சிக்கியுள்ளது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.2.72 கோடி மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு இதுவரை மொத்தம் 13 ஆயிரத்து 454 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 8,326 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 8,186 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 7,876 யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரங்கள் (வி.வி.பேட்) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்கு எந்திரங்கள் குறித்து வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 282 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த 15 தொகுதிகளில் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் மொத்தம் 37 லட்சத்து 77 ஆயிரத்து 970 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 19 லட்சத்து 25 ஆயிரத்து 529 பேரும், பெண் வாக்காளர்கள் 18 லட்சத்து 52 ஆயிரத்து 27 பேரும் உள்ளனர். திருநங்கை வாக்காளர்களின் எண்ணிக்கை 414 ஆகும்.
வாக்காளர்கள் அடையாள அட்டையை காட்டி ஓட்டுப்போட வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள், பாஸ்போர்ட் உள்பட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்களிக்க முடியும். இவ்வாறு சஞ்சீவ்குமார் கூறினார்.
சுயேச்சை வேட்பாளர்களில் முக்கியமானவரான ஒசக்கோட்டையில் போட்டியிட்டுள்ள சரத் பச்சேகவுடாவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் முக்கியமாக பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் 15 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) 12 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

Related Tags :
Next Story