வாக்காளர்களை ஏமாற்றிவிட்டதாக உத்தவ் தாக்கரே மீது போலீசில் புகார்


வாக்காளர்களை ஏமாற்றிவிட்டதாக உத்தவ் தாக்கரே மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 22 Nov 2019 4:52 AM IST (Updated: 22 Nov 2019 4:52 AM IST)
t-max-icont-min-icon

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வாக்காளர்களை ஏமாற்றி விட்டதாக அவுரங்காபாத்தை சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

மும்பை,

சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட சிவசேனா தற்போது, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தநிலையில் அவுரங்காபாத் மாவட்டம் பேகும்புரா பகுதியை சேர்ந்த பாரதீய ஜனதா ஆதரவாளரான ரத்னாகர் சோக் என்பவர் போலீஸ் நிலையத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மீது புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகாரில், “சட்டசபை தேர்தலுக்கு முன்பு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அவுரங்காபாத் மத்திய தொகுதி சிவசேனா எம்.எல்.ஏ. பிரதீப் ஜெய்ஸ்வால் மற்றும் முன்னாள் எம்.பி. சந்திரகாந்த் கைரே ஆகியோர் இந்துத்வாவை காக்கும் நோக்கில் சிவசேனா- பாரதீய ஜனதா கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கோரினர்.

சிவசேனா- பாரதீய ஜனதா கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வரும் நோக்கிலேயே நானும், எனது குடும்பம் மற்றும் அவுரங்காபாத் மத்திய தொகுதி வாக்காளர்கள் சிவசேனா வேட்பாளர் பிரதீப் ஜெய்ஸ்வாலுக்கு ஆதரவாக வாக்களித்தோம். ஆனால் சிவசேனா வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதன்மூலம் இந்துத்வாவை காக்கும் நோக்கில் வாக்களித்த நானும், எனது குடும்பத்தினரும், வாக்காளர்களும் ஏமாற்றப்பட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த புகார் மனுவை போலீசார் சிறப்பு பிரிவுக்கு அனுப்பி உள்ளனர்.

Next Story