செங்கல்பட்டு தொகுதியில் ரூ.3 கோடியில் திட்டப்பணிகள் எம்.எல்.ஏ. தகவல்


செங்கல்பட்டு தொகுதியில் ரூ.3 கோடியில் திட்டப்பணிகள் எம்.எல்.ஏ. தகவல்
x
தினத்தந்தி 22 Nov 2019 5:19 AM IST (Updated: 22 Nov 2019 5:19 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு தொகுதியில் ரூ.3 கோடியில் திட்டப்பணிகள் நடப்பதாக எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் கூறினார்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மது சூதனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு தொகுதிக்குட்பட்ட காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் கொளத்தூர் ஊராட்சி, புலிப்பாக்கம் ஊராட்சி, வெங்கடபுரம் ஊராட்சி, ரெட்டிபாளையம் ஊராட்சி, திம்மாவரம் ஊராட்சி, ஊரப்பாக்கம் ஊராட்சி, வல்லம் ஊராட்சி, நல்லம்பாக்கம், வேங்கடமங்கலம், பாலூர், ஆத்தூர், வில்லியம்பாக்கம், ஒழலூர், குண்ணவாக்கம், கொண்டமங்கலம், கல்,வாய், மண்ணிவாக்கம், பழவேலி, பெருமாட்டுநல்லூர், நெடுங்குன்றம், காயரம்பேடு, பரனூர், வண்டலூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் தலா ரூ.8 லட்சம் வீதம் ஆழ்துளை கிணறு, மின்மோட்டார், குடிநீர் குழாய் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் என்று பணிகள் தொடங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் ரூ.37 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். இது போல அரசு பள்ளிகளுக்கு மேசை, நாற்காலிகள், மாணவ- மாணவிகள் அமர இருக்கைகள் வழங்கப்படும்.

செங்கல்பட்டு தொகுதியில் மொத்தம் ரூ.2 கோடியே 99 லட்சத்து 77 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story