நகராட்சி பகுதிகளில்: வீடுகளில் கழிவுநீர் அகற்ற 4 வாகனங்கள் ஆணையர்களிடம் ஒப்படைப்பு
புதுச்சேரி, உழவர்கரை மற்றும் காரைக்கால் நகராட்சிபகுதிகளுக்கு உட்பட்டவீடுகளில் கழிவுநீர் அகற்றுவதற்காக 4வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி, உழவர்கரை மற்றும் காரைக்கால் நகராட்சிகளின் பயன்பாட்டிற்காக வீடுகளில் அமைந்துள்ள கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்காக மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் 4 வாகனங்கள் (செப்டிக் டேங்கர் லாரி) ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் நகராட்சி ஆணையர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி லாஸ்பேட்டை நவீன மீன் அங்காடி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு 4 வாகனங்களையும் நகராட்சி ஆணையர்களிடம் ஒப்படைத்து, வாகனங்களை கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.
விழாவில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்க்கண்ணன், உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி, கண்காணிப்பு பொறியாளர் சேகரன், செயற்பொறியாளர் குணசேகரன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளுக்கு தலா ஒரு வாகனமும், காரைக்கால் நகராட்சிக்கு 2 வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story