மதுரை அருகே அரசு பஸ்-கார் பயங்கர மோதல்: புகைப்பட கலைஞர்கள் 3 பேர் உடல்நசுங்கி பலி
நள்ளிரவில் அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அதில் பிறந்த நாள் விழாவில் பங்ேகற்றுவிட்டு காரில் வந்த புகைப்பட கலைஞர்கள் 3 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
திருப்பரங்குன்றம்,
மதுரை மாவட்டம் திருமங்கலம் சோனை மீனாநகர் ஆறுமுகம் தெருவை சேர்ந்தவர் பிரசன்னகுமார் (வயது 26). மதுரை பொன்மேனி வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர்கள் குணசேகரன் (20), தினேஷ்குமார் (25). இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவர்.
புகைப்பட கலைஞரான பிரசன்னகுமார், மதுரை காளவாசலில் போட்டோ-ஸ்டூடியோ நடத்தி வந்துள்ளார். குணசேகரன் தினேஷ்குமார் ஆகிய இருவரும் போட்டோகிராபர்களாக இருந்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் போட்டோ-வீடியோ எடுப்பதற்காக திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து பிரசன்ன குமாரை அவரது வீட்டில் கொண்டு விட்டுவிட்டு நிகழ்ச்சிக்கு செல்ல முடிவு எடுத்ததாக தெரிகிறது. ஆகவே அவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில் ஒரு காரில் மதுரையில் இருந்து புறப்பட்டு திருமங்கலம் நோக்கி சென்றனர். காரை பிரசன்னகுமார் ஓட்டிச்சென்றார்.
3 பேர் பலி
அப்போது திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம்-வேடர்புளியங்குளம் விலக்கு பிரிவில் வந்த போது திடீரென்று அந்த காரும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் கார் நொறுங்கி, பஸ்சின் அடியில் சிக்கிக்கொண்டது. அதில் இருந்த 3 பேரும் இடிபாடுகளுக்குள் உடல் நசுங்கி ரத்தவெள்ளத்தில் கிடந்தனர்.
உடனடியாக பஸ்சில் இருந்த பயணிகளும், அந்த பகுதியை சேர்ந்தவர்களும் ஓடிவந்தனர். போலீசாரும் தகவல் அறிந்து விரைந்து வந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். மதுரை மற்றும் திருமங்கலம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து காருக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் பிரசன்னகுமார், தினேஷ்குமார், குணசேகரன் ஆகிய 3 பேரையும் பிணமாக மீட்டனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த விபத்து தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறுதியாக கொண்டாடிய பிறந்தநாள்
விபத்தில் உயிரிழந்த தினேஷ்குமாருக்கு நேற்று முன்தினம் பிறந்த நாளாகும். ஆகவே அவரது பிறந்த நாளை மதுரையில் குணசேகரன், பிரசன்னகுமார் மற்றும் நண்பர்களுடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி உள்ளார்கள். பிறந்த நாள் விழா முடிந்ததும் நள்ளிரவில் மதுரையில் இருந்து திருமங்கலம் நோக்கி புகைப்பட கலைஞர்கள் 3 பேரும் ஒரே காரில் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Related Tags :
Next Story