மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவரை கைது செய்யாததை கண்டித்து தர்ணா போராட்டம்


மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவரை கைது செய்யாததை கண்டித்து தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 24 Nov 2019 4:30 AM IST (Updated: 24 Nov 2019 1:25 AM IST)
t-max-icont-min-icon

அகரம் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவரை இதுவரை கைது செய்யாததை கண்டித்து தர்ணா போராட்டம் நடைபெற்றது.

வரதராஜன்பேட்டை,

ஆண்டிமடம் அருகே அகரம் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவரை இதுவரை கைது செய்யாததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆண்டிமடம் நான்கு ரோடு சந்திப்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணிவேல் தலைமை தாங்கினார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் பத்மாவதி முன்னிலை வகித்தார். மாநில குழு உறுப்பினர் சின்னதுரை, மாதர் சங்க மாநில துணை செயலாளர் கீதா ஆகியோர் கண்டன உரையாற்றினர். போராட்டத்தில் அகரம் கிராமத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு உயிர் பாதுகாப்பு வழங்க வேண்டும். குற்றவாளியை போலீசார் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவ கவுன்சிலிங் வழங்க வேண்டும். ரூ.20 லட்சம் தமிழக அரசு ந‌‌ஷ்டஈடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதில் ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், ராதாகிரு‌‌ஷ்ணன், இளவரசன், ராஜேந்திரன், மாதர் சங்க மாவட்ட துணை செயலாளர் மீனா, ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story