எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் சுற்றுச்சுவருக்காக தூண்கள், சிலாப்புகள் தயாரிக்கும் பணி தொடக்கம்


எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் சுற்றுச்சுவருக்காக தூண்கள், சிலாப்புகள் தயாரிக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 24 Nov 2019 4:30 AM IST (Updated: 24 Nov 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் ரூ.10 கோடியில் சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது. இதற்காக முதல்கட்டமாக தூண்கள் மற்றும் காங்கிரீட்டிலான சிலாப்புகள் தயார் செய்யும் பணி தொடங்கியது.

திருப்பரங்குன்றம்,

மதுரை தோப்பூரில் உலகத்தரம் வாய்ந்த உயர் தர சிகிச்சை வசதி கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்காக வருவாய் துறையின் கீழ் 224.24 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது.

இங்கு கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன்பாக ரூ.10 கோடியில் 10 அடி உயரத்தில் 1500 சிலாப்புகளால் சுற்றுச்சுவர் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொடக்கம்

இதற்காக முதல்கட்டமாக காங்கிரீட்டிலான தூண்கள் மற்றும் காங்கிரீட் சிலாப்புகள் தயாரிக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியில் ஈரோட்டை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் மூலம் 75-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். 6 மாதத்தில் சுற்றுச்சுவர் கட்டுமான பணியை முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story