தொடுதலின் வித்தியாசத்தை குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லித்தர வேண்டும் - குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அறிவுறுத்தல்
தொடுதலின் வித்தியாசத்தை குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லித்தர வேண்டும் என்று குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் கூறினார்.
புதுச்சேரி,
புதுவையில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கென்னடி நகரில் ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கருணாலயம் தொண்டு நிறுவன கிராம நலச்சங்க இயக்குனர் அங்காளன் தலைமை தாங்கினார்.
சமூக நல வாரிய தலைவர் வைஜெயந்தி, நீட்ஸ் தொண்டு நிறுவன தலைவர் ராஜகோபால், பெரியகடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நலச்சங்க இணை இயக்குனர் புஷ்பவள்ளி வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தேவிபிரியா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பெண் குழந்தைகள் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும். பெண்மை மாறா வளர்ச்சி என்பதுதான் சமுதாயத்தின் உண்மையான வளர்ச்சி. பெண் குழந்தைகளுக்கு தொடுதலின் வித்தியாசத்தை பெற்றோர் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பில் எதற்கெடுத்தாலும் அரசை குறை சொல்வது சரியல்ல. இருப்பினும் குழந்தைகள் பாதுகாப்பில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
கடந்த 2 மாதங்களில் மட்டும் 22 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளனர். முன்பு புதுச்சேரியில் 66 குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள் இருந்தன. ஆனால் 27 இல்லங்களுக்கு மட்டுமே அரசு நிதி ஒதுக்கி வருவதால் அடிப்படை வசதிகள்கூட இல்லாத மற்ற இல்லங்களை அரசு தற்போது மூடி வருகிறது.
பாலியல் தொந்தரவில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பாதுகாப்புக்கென புதுச்சேரியில் ஒரே ஒரு சிறப்பு மையம் மட்டுமே முன்பு இருந்தது. தற்போது மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த 11 மருத்துவ மனைகளிலும் இதற்கென சிறப்பு மையங்கள் உள்ளன. இங்கு செல்வதற்கு எந்த ஆவணங்களும் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுவினர், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கருணாலயம் கிராம நலச்சங்க திட்ட ஒருங்கிணைப்பாளர் அபிராமி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story