30 ஆயிரம் பேருக்கு குடிநீர் தரும் அனுப்பன்குளம் கண்மாயை தூர்வார கோரிக்கை
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் அனுப்பன்குளம் கண்மாயை தூர்வார வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஒருவர் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சிவகாசி,
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது அனுப்பன்குளம். இந்த பஞ்சாயத்தில் அனுப்பன்குளம், மயிலாடும்துறை, பேராபட்டி, ராமலிங்காபுரம், சுந்தரராஜபுரம், ராமசாமிபுரம், மீனம்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் 27 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். இதில் 11 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இங்குள்ள அனுப்பன்குளம் கண்மாய் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இந்த கண்மாயில் தேங்கும் தண்ணீரை வைத்து கடந்த காலங்களில் 700 ஏக்கர் நிலம் பாசனவசதி பெற்றுள்ளது. காலப்போக்கில் இந்த கண்மாய்க்கு தண்ணீர் வரும் பாதை ஆக்கிரமிப்புகளால் அடைக்கப்பட்டதால் தண்ணீர் வரத்து தடைப்பட்டு போனது. இதனால் இந்த கண்மாயில் இருந்து தண்ணீர் பெற்று விவசாயம் செய்து வந்தவர்கள் விவசாயத்தை கைவிட்டு சென்று விட்டனர்.
15 ஆண்டுகள்
அனுப்பன்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இந்த கண்மாயில் இருந்து தான் குடிநீர் எடுத்து வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கான கண்மாயில் 37 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 7 கிணறுகள் அமைக்கப்பட்டு அதில் இருந்து தண்ணீர் பெற்று மக்கள் தாகம் தீர்க்கப்பட்டு வருகிறது. இப்படி 30 ஆயிரம் மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வரும் இந்த கண்மாயில் தற்போது கருவேல மரங்கள் அதிகஅளவில் வளர்ந்துள்ளது. இதனால் கண்மாயில் உள்ள தண்ணீர் விரைவில் வற்றிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்குமுன் இந்த கண்மாய் நிரம்பியது.
அதன் பின்னர் கண்மாய் நிரம்பவில்லை. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், நீர் வரத்து பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் தான் முக்கிய காரணம். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜ் கண்மாயில் உள்ள கருவேல மரங்களை அகற்றி வருகிறார்.
தூர்வார வேண்டும்
இது குறித்து அவர் கூறியதாவது:- விருதுநகர் மாவட்டத்திலேயே பெரிய கண்மாய் என்ற பெயர் அனுப்பன்குளம் கண்மாய்க்கு உண்டு. இந்த கண்மாயில் இருந்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வந்த காலம்போய் தற்போது குடிநீருக்காக இப்பகுதி மக்கள் அவதிப்பட்ட நாட்கள் உண்டு. கடந்த மாதம் பெய்த மழையால் தற்போது கண்மாயில் தண்ணீர் தேங்கி உள்ளது.
இந்த தண்ணீர் இன்னும் 4 மாதங்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும். தொடர்ந்து மழை பெய்தால் கண்மாய் நிரம்ப வாய்ப்பு உள்ளது. கண்மாயில் தற்போது கருவேல மரங்கள் அதிகஅளவில் வளர்ந்து இருப்பதால் நீரை உறிஞ்சும் நிலை இருக்கிறது.
அதனால் எனது சொந்த செலவில் கருவேல மரங்களை மட்டும் அதிகாரிகளின் அனுமதியுடன் அகற்றி வருகிறேன். இந்த கண்மாயை தூர்வார மாவட்ட நிர்வாகமும், சிவகாசி ஒன்றிய நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் அனுப்பன்குளம் பஞ்சாயத்து பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திறந்தவெளி கழிப்பிடம்
100 ஏக்கர் பரப்பளவு உள்ள அனுப்பன்குளம் காண்மாயில் எப்போதாவது தான் தண்ணீர் இருக்கிறது. இதை பயன்படுத்திக்கொள்ளும் அப்பகுதி மக்கள் கண்மாய் ஓரங்களை திறந்தவெளி கழிப்பிடங்களை பயன்படுத்தி வருகிறார்கள். கழிவு பொருட்களை கொட்டும் குப்பை தொட்டியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இரவு நேரங்களில் கண்மாய்க்குள் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக கூறப்படுகிறது. சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வரும் இந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு சட்டவிரோத செயல்களை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாவட்ட போலீஸ் நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Tags :
Next Story