மஞ்சூர் பாலகொலாவில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
மஞ்சூர் அருகே பாலகொலாவில் பழுதடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மஞ்சூர்,
மஞ்சூர் அருகே பாலகொலாவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து பால கொலாஜங்சன், பரமூலை, மணலாடா போன்ற பகுதிகளுக்கு ஊராட்சி மன்றம் சார்பில் இணைப்பு சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த இணைப்பு சாலையால் இந்த கிராமத்தை சுற்றிலும் பல்வேறு கிராமங்கள் பயனடைந்து வருகின்றன.
இந்தநிலையில் பால கொலா கிராமத்தில் இருந்து பரமூலை வரை சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள சாலை தற்சமயம் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும் தற்போது மழை பெய்து வருவதால் மழை நீர் சாலைகளில் வடிய முடியாமல் சாலைகள் குளம் போல் காட்சியளிக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பாலகொலா சாலை முக்கிய பாதையாக உள்ளதால் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. தற்போது அந்த சாலை பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் தொடர் மழையின் காரணமாக சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக எங்களால் நடந்து செல்ல முடியவில்லை. குறிப்பாக அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. மேலும், 2 சக்கர வாகனங்கள் அனைத்தும் தட்டுத்தடுமாறி செல்கிறது. இதில் ஒருசில நேரங்களில் வாகனங்களில் இருந்து அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். மேலும் மழை நீர் தேங்கியுள்ளதால் அடிக்கடி வரும் வாகனங்கள் குண்டும் குழியுமான இடங்களில் இறங்கி வருவதில் பாதசாரிகள் மீது சேற்றை அவ்வப்போது வாரி இதைப்பதும் வேதனைக்குரியதாக உள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கூறியும் இது நாள் வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story