மதுக்கரையில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்: பயனாளிகளுக்கு ரூ.4¾ கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்
மதுக்கரையில் நடந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் ரூ.4¾ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பயனாளிகளுக்கு வழங்கினார்.
போத்தனூர்,
கோவையை அடுத்த மதுக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் 1,633 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 81 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
கிணத்துக்கடவு தொகுதியில் நான் கடந்த 2006-2011 வரை எம்.எல்.ஏ.வாக இருந்தேன். 50 ஆண்டுகளாக கோவை பெறாத வளர்ச்சியை கடந்த 5 ஆண்டுகளில் பெற்று உள்ளது. தற்போது மதுக்கரை பகுதியில் கோர்ட்டு கொண்டு வரப்பட்டு உள்ளது. விரைவில் சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்படும். இந்த பகுதியில் ரூ.3,500 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில் 90 சதவீத விபத்துகளை குறைத்து உயிர்களை காப்பாற்ற, பல்வேறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 3-வது கூட்டு குடிநீர் திட்டத்தில் கோவையின் குடிநீர் தேவை முற்றிலும் பூர்த்தி செய்யப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் சென்னை மெரினாவை போல் கோவையில் உக்கடம், குறிச்சி குளங்கள் மேம்படுத்தப்படும். விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரெயில் திட்டம், தடுப்பணைகள் உள்பட பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த சில நாட்களாக நடந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் முதியோர் ஓய்வூதியம் குறித்த மனுக்கள் அதிகமாக பெறப்பட்டு உள்ளன. அந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
உள்ளாட்சி துறையில் தமிழகம் 86 விருதுகளை பெற்றுள்ளது. மகளிருக்கு சுயதொழில் தொடங்க தற்போது ரூ.56 ஆயிரம் கோடி கடன் பெற்று கொடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக குறிச்சி மற்றும் மதுக்கரை உதவி மின்பொறியாளர் அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி, எம்.எல்.ஏ.க்கள் எட்டிமடை சண்முகம், கந்தசாமி, கஸ்தூரி வாசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story