பெரம்பலூரில் ஓடும் ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் குழந்தை பிறந்தது
பெரம்பலூரில் ஓடும் ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா திருவாலந்துறை கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவரது மனைவி சாந்தி பிரியா (வயது 26). இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சாந்தி பிரியாவுக்கு நேற்று வீட்டில் இருந்தபோது பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் பிரசவத்துக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல லெப்பைகுடிக்காட்டில் உள்ள 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, சம்பவ இடத்திற்கு ஊழியர்கள் விரைந்து வந்து கர்ப்பிணியை ஆம்புலன்சில் அழைத்து கொண்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர்.
பெண் குழந்தை பிறந்தது
அப்போது பெரம்பலூர் நான்கு ரோட்டிற்கும், பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கும் இடையே ஆம்புலன்சு சென்று கொண்டிருந்தபோது, சாந்தி பிரியாவுக்கு பிரசவ வலி அதிகமானது. நிலைமையை புரிந்து கொண்ட டிரைவர் ராஜா ஆம்புலன்சை மெதுவாக ஓட்ட, அவசர கால மருத்துவ உதவியாளர் இளையராஜா பிரசவம் பார்த்தார். பிரசவத்தில் சாந்தி பிரியாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், சேயும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஓடும் ஆம்புலன்சில் திறம்பட செயல்பட்டு பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு சாந்தி பிரியாவின் உறவினர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Related Tags :
Next Story