சத்துணவு திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும் பணியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம்


சத்துணவு திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும் பணியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 25 Nov 2019 4:15 AM IST (Updated: 25 Nov 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

சத்துணவு திட்டத்திற்கு தனித்துறை அரசு உருவாக்க வேண்டும் என சத்துணவு பணியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூரில் சத்துணவு பணியாளர் சங்கத்தின் புதிய வட்ட கிளை அமைப்பின் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பூபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேவராஜன், மாவட்ட இணை செயலாளர் கென்னடி, மாநில பிரசார செயலாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் புதிய கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

சத்துணவு பணியாளர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் இருந்து அரசு பணியாளர்களுக்கு வழங்குவதுபோல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

அகவிலைப்படி

பணி ஓய்வு பெறும் சத்துணவு பணியாளர்களுக்கு ஓய்வு பெறும் நாளில் பெறுகின்ற ஊதியத்தில் 50 சதவீதம் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி உயர்வை சேர்த்து குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு திட்டத்திற்கு தமிழக அரசு தனித்துறையை உருவாக்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவிட்டு செலவை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story