வெங்கல் அருகே தனியார் நிறுவன மேலாளரை தாக்கிய வாலிபர் கைது - ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட 3 பேருக்கு வலைவீச்சு


வெங்கல் அருகே தனியார் நிறுவன மேலாளரை தாக்கிய வாலிபர் கைது - ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Nov 2019 3:30 AM IST (Updated: 25 Nov 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

வெங்கல் அருகே தனியார் நிறுவன மேலாளரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அருகே ஆயிலச்சேரி ஊராட்சியில் புதுக்குப்பம் கிராமம் உள்ளது. இங்குள்ள தனியார் நிறுவனத்தில் உற்பத்தி மேலாளராக பணியாற்றி வருபவர் சேகர்(வயது 38). இந்த ஊராட்சியின் செயலாளர் ஜார்ஜ், மகன்கள் எபி என்ற எபினேஸ் (31), டேவிட், தம்பி ரமேஷ் ஆகியோர் நேற்றுமுன்தினம் மாலை தனியார் நிறுவனத்திற்கு சென்று சொத்துவரி கட்டுமாறு கூறியுள்ளனர். அப்போது மேலாளர் சேகர் இந்த நிறுவனத்தை முறையாக அளந்து எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பதை தெளிவாக தெரிவிக்கும்படி கூறியுள்ளார்.

அப்போது ஊராட்சி செயலாளர் ஜார்ஜுக்கும், தனியார் நிறுவன மேலாளர் சேகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஜார்ஜுக்கு ஆதரவாக அவரது தம்பி மற்றும் மகன்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதையடுத்து ஊராட்சி செயலாளர் மற்றும் அவருடன் வந்த 3 பேரும் சேர்ந்து சேகரை தாக்கினர்.

இதுகுறித்து தனியார் நிறுவன மேலாளர் சேகர் வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதுதொடர்பாக எபினேசை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஊராட்சி செயலாளர் ஜார்ஜ், ரமேஷ், டேவிட் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story