தச்சு தொழிலாளர்களுக்கு கடன் வழங்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்


தச்சு தொழிலாளர்களுக்கு கடன் வழங்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 25 Nov 2019 4:00 AM IST (Updated: 25 Nov 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

தச்சு தொழிலாளர்களுக்கு கடன் வழங்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூர்,

தமிழ்நாடு தச்சுத் தொழிலாளர் சங்கத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் நடந்தது. இதற்கு கரூர் மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தச்சுத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.பாலு கலந்து கொண்டு பேசினார். கரூர் மாவட்ட பொருளாளர் ராஜமாணிக்கம், துணைத்தலைவர் அங்கமுத்து, துணை செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.

தொழில் கடன் வழங்க...

கூட்டத்தில், வெளிமாநில தொழிலாளர்களின் வருகை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இதனால் தமிழக தச்சு தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தச்சு தொழிலாளர்களுக்கு தொழில் உபகரண கருவிகளை மானிய விலையில் அரசு வழங்க வேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் தொழில் கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் திண்டுக்கல், மதுரை, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story