சாரல் மழை காரணமாக, சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
விருதுநகர் வத்திராயிருப்பு அதன் சுற்றுவட்டார பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை காரணமாக சதுரகிரி மலைக்குச்செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
வத்திராயிருப்பு,
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.பிரதோஷ வழிபாட்டு மற்றும் அமாவாசை வழிபாட்டுக்காக சதுரகிரி மலைக்கு செல்ல நான்கு நாட்களுக்கு பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்தது.
நேற்று காலை பிரதோஷ வழிபாட்டுக்காக 800-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காலை முதல் சதுரகிரி மலைக்குச் சென்றனர். ஆனால் நேற்று காலை 8.30மணி அளவில் மலைப்பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால் சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் விருதுநகர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏற முடியாமல் தவித்தனர்.
சாரல் மழை காரணமாக காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் பக்தர்கள் சதுரகிரி மலைக்குச்செல்ல அனுமதி இல்லை என வனத்துறை தெரிவித்ததையடுத்து 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினார்.
Related Tags :
Next Story