ஆத்தூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி மரத்தில் ஏறி தேங்காய் பறித்தபோது பரிதாபம்


ஆத்தூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி மரத்தில் ஏறி தேங்காய் பறித்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 25 Nov 2019 3:45 AM IST (Updated: 25 Nov 2019 2:39 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானார்.

ஆத்தூர்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை ஊராட்சி ஆயர்பாடி பகுதியை சேர்ந்தவர் கிரு‌‌ஷ்ணன் (வயது 63), விவசாயி. இவரது தோட்டத்தில் தென்னை மரங்களில் தேங்காய் பறிப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை (50) என்பவரை அழைத்து வந்தார். நேற்று காலை தென்னை மரங்களில் ஏறி தேங்காய்களை செல்லத்துரை பறித்து கொண்டிருந்தார்.

மின்சாரம் தாக்கி பலி

அப்போது தென்னை மரத்தையொட்டி செல்லும் மின்சார வயரில் செல்லத்துரை உரசியதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் செல்லத்துரை அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

பலியான செல்லத்துரைக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், இளங்கோ, மதன்குமார் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இதுகுறித்து ஆத்தூர் ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story