திருவாரூரில் பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை
திருவாரூரில், பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவாரூர்,
திருவாரூர் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருள். இவருடைய மனைவி கற்பகவள்ளி (வயது 36). இவர், திருவாரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களாக இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இதனால் இனிமேல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து உடல் நலனை பார்த்து கொள்ளுமாறு கற்பகவள்ளியிடம் அவருடைய கணவர் அருள் கூறி உள்ளார். அதற்கு கற்பகவள்ளி வேலைக்கு செல்லாமல் என்னால் இருக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
தற்கொலை
இதில் மனவேதனை அடைந்த கற்பகவள்ளி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசில் அருள் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கற்பகவள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story