எடப்பாடி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து செல்போன் கடை உரிமையாளர் பலி நண்பர்கள் 2 பேர் படுகாயம்


எடப்பாடி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து செல்போன் கடை உரிமையாளர் பலி நண்பர்கள் 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 26 Nov 2019 4:30 AM IST (Updated: 26 Nov 2019 2:25 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து செல்போன் கடை உரிமையாளர் பலியானார். மேலும் அவரது நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

எடப்பாடி,

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த லட்சுமன்சிங்கவுடா (வயது 30) என்பவர் செல்போன் கடை நடத்தி வந்தார். இவரது நண்பர்கள் குமாரபாளையத்தை சேர்ந்த கோபால்நாத் (22), சரவணன்சிங்(30). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டு விஷேச நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்றனர். காரை லட்சுமன்சிங்கவுடா ஓட்டிச்சென்றார்.

கார் கவிழ்ந்தது

எடப்பாடி அருகே கரட்டுகாடு என்ற இடத்தில் உள்ள ஒருவளைவில் சென்ற போது கார் நிலைதடுமாறி எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் வந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக எடப்பாடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே லட்சுமன்சிங் கவுடா பரிதாபமாக உயிரிழந்தார்.

கோபால்நாத், சரவணன்சிங் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கொங்கணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story